இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது .
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்கங்களின் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது .
தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இன்று ஊர் திரும்பும் நிலையில் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
எந்த வித கட்டண உயர்வு புகாரும் இன்றி 120க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் இன்று மாலை பயணத்திற்கு ஆம்னி பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours