சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை மாநிலங்களின் குரலை அழித்துவிடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையினை ஏற்படுத்தும்!
எழுக இந்தியா!. இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம்!’ எனத் தெரிவித்துள்ளார்
+ There are no comments
Add yours