நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றில் குறிப்பிட்ட தொகையை வழங்கினார்.
அதுமட்டுமில்லாமல், விலை உயர்ந்த BMW X7 சொகுசு கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். இந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடன் ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் நாளை காஞ்சிபுரத்திலிருந்து தமிழகம் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று ரஜினியுடன் சந்திப்பு நடந்துள்ளது.
+ There are no comments
Add yours