விஷச்சாராய உயிரிழப்பு- தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் !

Spread the love

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே நேற்று முன்தினம் இரவு கள்ளச்சாராயம் அருகில் 3 பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் பல உடல் நலக்குறைவுகளுடன் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழக்கத் தொடங்கினர்.

இப்போது வரை 35பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 30-க்கும் மேற்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எத்தனால் எனப்படும் திரவத்தை சாராயத்தில் கலந்து விற்றதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இன்று சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours