தமிழகத்தில் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதகாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ-க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
பொதுமக்களுக்கு பிரத்யேக உதவி எண் 1913 வழங்கப்பட்டுள்ளது; கட்டுப்பாட்டு அறையில் 150 பேர் 4 ஷிப்டக்களாக 24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
‘தமிழ்நாடு அலர்ட்’என்ற புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது; அதனை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் மழை குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
13,000 தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர். மேலும் மழைநீர் தேங்கினால் வெளியேற்ற 113 எண்ணிக்கையிலான 100 HP பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவு தண்ணீர் போன்ற பொருட்களை உறுதி செய்வார்கள். இவ்வாறு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours