முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக ரோப் கார், மின்இழுவை ரெயில் ஆகிய வசதிகள் உள்ளன.
இந்நிலையில் நாளை முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
+ There are no comments
Add yours