சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி !

Spread the love

https://politricstv.com/wp-admin/post.php?post=36210&action=edit
சவுக்கு சங்கர்

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் 4ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது அவரிடம் சுமார் 400 கிராம் அளவுக்கு கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் சவுக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்தபோது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வரும் முன்பே திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி கடந்த திங்களன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours