25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம் !

Spread the love

இந்தியாவில் வருகிற 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் வருகிற 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17-ந்தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள் முழுமையாக விலகும். இந்த நிலையில் இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்குகிறது.

மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து செப்டம்பர் 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் என்றும் படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை விலகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours