திருநெல்வேலி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை மறு பரிசீலனை செய்து நிராகரிக்கக் கோரி நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் தாக்கல் செய்த வழக்கு இன்று (16.04.2024) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு 11வது வழக்காக விசாரணைக்கு வந்தது.
தேர்தல் நெருங்கி விட்டதால் மேற்படி மனுவை மாவட்டத்தில் நீதிமன்றத்தால் தேர்தல் ஓபியாக தாக்கல் செய்து நிவாரணம் தேடிக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வாரத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் ஓபி தாக்கல் செய்யப்பட உள்ளது. மனுவை முழுவதுமாக தள்ளுபடி செய்யாமல் மனுதாரர் மகாராஜனுக்கு கோரிக்கையை மாற்று வழியில் தேடிக் கொள்வதற்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது நயினார் நாகேந்திரன் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வேட்பு மனு பின்னாளில் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதையே நீதிமன்றம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற்றாலும் அந்த பதவி நீடிக்குமா என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மேலும் இரண்டு புதிய மனுக்களையும் இன்று அல்லது நாளை நேதாஜி சுபாஷ் சேனை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours