தமிழ்நாடு பாஜகவை இரண்டு ஆண்டுகள் என்னிடம் தந்து பாருங்கள், இந்துமத எதிர்ப்பாளர்களை நீங்கள் திகார் சிறையில் பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதனத் ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, டெங்கு, மலேரியாவை நாம் எதிர்க்க முடியாது. அதை ஒழிக்கத்தான் முடியும். அதேபோல, சனாதனத்தையும் நாம் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று உதயநிதி பேசி இருந்தார்.
உதயநிதி இந்த பேச்சுக்கு இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பாஜவினர் திரித்து பரப்பிய நிலையில் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தமிழ்நாடு பாஜக ஒரு கோழை என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
திமுக எதிர்ப்பு தமிழ் “அறிவுஜீவிகள்” வாலைப் சுருட்டி கொண்டு ஓடுகிறார்கள். தமிழக பாஜக கோழைத்தனமானது. குருமூர்த்திக்கு நாக்கு கட்டுப்பட்டது . ஆனால் மோடியின் தர்பாரில் அவர் தமிழர் தலைவர் என்று கூறுகிறார் .தமிழ்நாடு பாஜகவை இரண்டு வருடங்களுக்கு என்னிடம் தாருங்கள், பிறகு நீங்கள் தமிழ்நாடு இந்து விரோதிகளை திகார் சிறையில் சந்திக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours