கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் பின்புறம் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது வேதனைக்குரிய விஷயம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் சம்பவத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஏரளாமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் நிலைமையை கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது :
கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் பின்புறம் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது வேதனைக்குரிய விஷயம். தமிழகத்தில் கள்ளச்சாராய் இறப்புகள் ஏற்படாதவாறு முதல்வர் தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு முதல்வர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு காரணம் திமுக அரசுதான். இது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தான் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. அப்போது கள்ளக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவரது தொகுதியில் அவருக்கு தெரியாமல் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours