இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 39 ஓதுவார் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளது. 15 ஓதுவார் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு இன்று அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 39 ஓதுவார் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. 15 ஓதுவார் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு இன்று (25.09.2023) பணி நியமன ஆணையை வழங்கினோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க, ஆணுக்கு பெண் நிகர் என்பதை நிருபிக்கின்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியில் 10 பெண் ஓதுவார்கள் இதுவரை நியமிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிச் சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம்! சுருங்கச் சொன்னால், திராவிட இயக்கப் பற்றாளர்கள் புகழ்வது போல், இது “பெரியாரின் நெஞ்சில் நமது திராவிட மாடல் அரசு வைக்கும் ‘பூ’! மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை வாழ்த்துகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.
சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிச் சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம்!
சுருங்கச் சொன்னால், திராவிட இயக்கப் பற்றாளர்கள் புகழ்வது போல், இது “பெரியாரின் நெஞ்சில் நமது #DravidianModel அரசு வைக்கும் ‘பூ’!”
+ There are no comments
Add yours