வாக்கு எண்ணிக்கை முகவர் பயிற்சிக் கூட்டம்
திமுக தலைமைக் கழகம் சார்பில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் இன்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கௌதம் சிகாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், திமுக மாவட்டப் பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா இளந்திரையன்,
திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.
விசிக மேலிடப் பொறுப்பாளர் வன்னி அரசு, நாவரசன், தலைமை முகவர் லாரன்ஸ், மாவட்டச் செயலாளர்கள் பெரியார், விடுதலைச்செல்வன், அறிவுக்கரசு, திலீபன், மலைச்சாமி, பொன்னிவளவன் உள்ளிட்டோருடன் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்றனர்.
திமுக தலைமை நிலையத்தில் திரு ஆர்.எஸ்.பாரதி, திரு டி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் வழக்கறிஞர் திரு என்.ஆர்.இளங்கோ அவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சிறப்பாக விளக்கினார். இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாகவும் விழிப்புணர்வூட்டுவதாகவும் இருந்தது
+ There are no comments
Add yours