கடந்த 2 நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, வெள்ளியங்கிரி மலையின் 7 மலைகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். செங்குத்தான அமைப்பை கொண்ட இந்த மலையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வது சற்று சவாலாக இருந்தாலும், ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். அப்போது 4வது மலை ஏறிக்கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
+ There are no comments
Add yours