தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் விஜய் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியை அறிவித்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கடந்த 22ஆம் தேதி தவெக கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கொடியில் அமைந்திருக்கும் யானை, வாகை மலர் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த சர்ச்சைகளுக்கு விஜய் தவெக முதல் மாநாட்டில் பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். தவெக-வின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்ததும் விஜய் முன்னெடுக்கும் முதல் அரசியல் மாநாடு என்பதால் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று சென்றிருக்கிறார்.
இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய நடிகர் விஜய் ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours