கன்னியாகுமரி: வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான். அனைவரும் சமம் என்பது தான் சனாதன தர்மம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி தெற்கு தாமரைக் குளத்தில் உள்ள தாமரைக்குளம் அய்யா வைகுண்டசுவாமி பதி கோவிலில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்றார் .
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, “அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான். அதுதான் சனாதன தர்மம்.
முன்பு சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு பலர் கோவிலில் கூட நுழைய முடியாமல் இருந்தனர். கடவுள் மகா விஷ்ணு வைகுண்டராக அவதரித்தார். சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார். அய்யா வழியில் நமது நாட்டை வழி நடத்தி வருபவர் நமது பிரதமர் மோடி” எனப் பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours