நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்… நூல் வெளியீட்டு விழா !

Spread the love

சென்னையில் உள்ள ராயபுரத்தில் மூத்த ஊடகவியலாளர் தி. செந்தில்வேல் எழுதிய ” நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்? ” நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இவ்விழாவில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் மு. அப்பாவு நூலை வெளியிட்டார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நூலை பெற்றுக்கொண்டார். தமிழ் திரைப்பட இயக்குனர் தமிழ், பேராசிரியர் ஹாஜாகனி, எஸ்டி குழும தலைவர் அன்சாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் செந்தில்வேல் நிர்வகித்து வரும் YouTube -ஐ பின் தொடரும் மக்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

முதலில் நாம் எத்தனை பெரிய வரலாற்றுக்கும் பாரம்பரியத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பதை புரிந்துக் கொண்டால் மட்டுமே தமிழகம் ஏன் தனித்து நிற்கிறது என்பது புலப்படும்.

மற்ற மாநிலங்கள் எல்லாம் பாஜகவை ஏற்றுக்கொண்டாலும் தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு நீண்ட வரலாற்று பின்னணி உண்டு என்ற கருவை தாங்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours