அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் படி இன்று டிச.26, செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சியின் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் . உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டிருந்தது .
இந்நிலையில் சொன்ன தேதியில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று காலை 10:35 மணிக்கு இக்கூட்டங்கள் தொடங்க உள்ளன.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
+ There are no comments
Add yours