தேசிய லோக் – அதாலத்: 62,559 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு!

Spread the love

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த தேசிய லோக் – அதாலத்தில்வாகன விபத்து ஒன்றில் கால்களை இழந்தமனுதாரருக்கு ரூ.80.10 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா வழங்கினார்உடன்உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்ஆர்.எம்.டி.டீக்காராமன்பி.பி.பாலாஜி உள்ளிட்டோர்

சென்னைசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும்மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமானஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரான நீதிபதி ஆர்.மகாதேவன்உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோரது அறிவுறுத்தலின்படிஇந்தாண்டின் முதல் லோக்அதாலத் தமிழகம் முழுவதும் நடந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.சத்யநாராயண பிரசாத்பி.பி.பாலாஜிஆர்.கலைமதிகே.ராஜசேகர்என்.செந்தில்குமார்ஜி.அருள்முருகன் மற்றும்ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.கோகுல்தாஸ்எம்.ஜெயபால் ஆகியோர் தலைமையில் 8 அமர்வுகளும்உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.மதிகே.கே.ராமகிருஷ்ணன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும்சென்னை கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமையில் ஒருஅமர்வும் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதேபோல மாநிலம் முழுவதும்உள்ள கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 482 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவைவழக்குகள் விசாரிக்கப்பட்டனஇதில் நேற்று மாலை நிலவரப்படிதமிழகம் முழுவதும் மொத்தம் 62 ஆயிரத்து 559 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுஅதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 505கோடியே 78 லட்சத்து18 ஆயிரத்து659 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டதுசென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றலோக்அதாலத்தை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்எஸ்.எம்.சுப்ரமணியம்ஆர்.எம்.டி.டீக்காராமன்என்.சதீஷ்குமார்பி.டி.ஆதிகேசவலுசி.சரவணன்ஆகியோர்பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவை வழங்கினர்.

இந்த லோக்அதாலத்தில் வழக்கறிஞர்கள்பல்வேறு துறை சார்ந்தஅரசு அதிகாரிகள்காப்பீட்டு நிறுவனஅதிகாரிகள் பங்கேற்றனர்.

லோக்அதாலத்துக்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்டநீதிபதியுமான .நசீர் அகமதுஉயர் நீதிமன்றசட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமானகே.சுதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours