தேனியில் வனத்துறையினரால் முதியவர் சுட்டுக்கொலை..!!

Spread the love

தேனியில் உள்ள வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகளால் முதியவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியை சேர்ந்த சிலர் அங்குள்ள வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றாதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை கண்டு வழிமறித்த வனத்துறையினர் வேட்டைக்கு சென்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வேட்டையர்களுக்கும் வனத்துறையினருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றியபோது வேட்டையர்களில் ஒருவரான ஈஸ்வரன் என்ற முதியவர் வனத்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது வனத்துறையினர் தங்களது தற்காப்புக்காக ஈஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ஈஸ்வரனின் சடலம் தற்போது தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில் அங்கு வந்த அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரவில் தோட்டத்திற்கு சென்றவரை வனத்துறையினர் சுட்டுக்கொன்றதாக கூறி, கம்பம் அரசு மருத்துவமனை முன்பு அந்நபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் நடைபெறாமல் இருக்க போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours