சென்னையின் முக்கிய சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, ‘ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்’ கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னை முழுக்க தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-டர்ன் அதிகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது இந்த திட்டத்தின் கீழ் பல சிக்னல்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூட சென்னை போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நகரம் முழுவதும் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் 65 சிக்னல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த திட்டம் தற்போது ஸ்பென்சர், தேனாம்பேட்டை மற்றும் தி நகர் சிக்னல்களில் சோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஓஎம்ஆர், ஈவிஆர் சாலை மற்றும் 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பென்சர், நந்தனம் ஆகிய இடங்களில் சிக்னல்கள் மூடப்பட்டு, ஒருபுறம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வலப்புறம் திரும்பவோ அல்லது U-டர்ன் எடுக்கவோ மீடியன் U-டர்ன் சந்திப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் சிக்னல் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. எல்டாம்ஸ் சாலை மற்றும் தி.நகரில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலைக்கு சென்று, தேனாம்பேட்டை மெட்ரோ மற்றும் அண்ணா அறிவாலயம் சந்திப்புகளில் யு-டர்ன் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-டர்ன் அதிகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. காவல்துறை இந்த மாற்றங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி, பின்னூட்டத்தின் அடிப்படையில் மற்ற சிக்னல்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.
OMR இல் உள்ள டைடல் பார்க் போன்ற சில சந்திப்புகளுக்கு சில கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தேவையான மாற்றங்களைச் செய்ய நெடுஞ்சாலைகள் போன்ற பிற துறைகளுடன் நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் எஸ்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில், சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து, விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பல மாநகரங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தருவது போக்குவரத்து நெரிசல். இதை குறைப்பதற்கான ஒரு சிறப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும், என்று உத்தரவிட்டு இருந்தார். ஆய்வு: இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் அவர்கள் மண்டலம் வாரியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மூன்றாவது ஆய்வுக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சீரான போக்குவரத்து குறித்தும், நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
இக்கூட்டத்தில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் ஆகிய துறைகள் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு அறிவுறுத்தினார்கள். முடிக்குமாறு மேலும், மண்டலம் வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர், உதவி ஆணையர், போக்குவரத்து காவல் துறை, உதவி செயற் பொறியாளர், நெடுஞ்சாலை துறை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கள ஆய்வு செய்து போக்குவரத்து தடையின்றி செல்வதை உறுதி படுத்த வேண்டும். என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
+ There are no comments
Add yours