கோடை காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், வெப்பத்தை தவிர்க்க அனைவரும் ஏசி அல்லது ஏர் கூலரை பயன்படுத்துகின்றனர். இதில் ஏசி பயன்படுத்தும்போது சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
அண்மையில் நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டை குளிர்விப்பதுதான் ஏசியின் முதல் வேலை. ஆனால், வெப்ப அலை காரணமாக ஏசியின் அவுட்டோர் யூனிட் வெப்பம் அடைகிறது. இது தீவிபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் ஏசியின் அவுட்டோர் யூனிட்டை சூரிய ஒளி அதிகம் படாத இடத்தில் வைக்க வேண்டும்.
அதாவது சூரியனுக்கு நேராக ஏசி அவுட்டோர் யூனிட்டை வைக்கக் கூடாது. அப்படித்தான் வைக்க வேண்டிய சூழல் இருந்தால், அதன் நிழலுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும். ஏனெனில், ஏசி அவுட்டோர் யூனிட்டில் இருக்கும் கம்ப்ரசர் வெப்பத்தில் இருந்தால் ஆபத்து ஏற்படும்.
அதேபோல், இரவு முழுவதும் ஏசியை இயக்கக் கூடாது. அவ்வாறு இயக்குவதும் ஆபத்தானதுதான். எனவே, டைமர் பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் ஏசியை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால், நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும், ஏசி தானாகவே அணைந்துவிடும். இதனால், ஏசிக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். அது விரைவில் சேதமடையாது.
ஏசியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு 600 மணி நேர பயன்பாட்டிற்கு ஒருமுறை ஏசியை சர்வீஸ் செய்துவிட வேண்டும் என்பது வல்லுநர்களின் அறிவுறுத்தல்.
அதேபோல், ஏசி குளிர்ச்சியடையவில்லை என்றாலும், வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அதை உடனுக்குடன் சரி செய்து கொள்வது உங்களது ஏசியின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும். ஒருவேளை அறை குளிர்ச்சியடையாமல் ஏசி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தால், மெஷினில் அழுத்தம் ஏற்பட்டு, அது வெடிக்கக் கூடும். மேலும், ஏசியில் இருக்கும் வாயு கசிவு பிரச்சனை ஏற்பட்டாலும், அது ஆபத்தானதுதான்.
+ There are no comments
Add yours