லேப்டாப் வாங்க போறீங்களா? அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க

Spread the love

கன்வெர்ட்டபிள் லேப்டாப் (convertible laptop)-கள் என்பது டூ-இன்-ஒன் லேப்டாப்கள் என்றும் அறியப்படுகிறது. அதாவது லேப்டாப் மற்றும் டேப்லெட்டாக செயல்படும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை சக்திவாய்ந்த ப்ராசஸர்கள் மற்றும் Windows அல்லது ChromeOS போன்ற ஆப்ரேட்டிங் சிஷ்டம்ஸ்களுடன் வழக்கமான லேப்டாப்களின் வலுவான செயல்பாட்டை வழங்குகின்றன.

ஆனால் அதே நேரம் டச்ஸ்கிரீன் இன்டர்ஃபேஸ் கொண்ட நேர்த்தியான டேப்லெட்களாகவும் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் முக்கிய நன்மை என்னவென்றால், டச்பேட் மற்றும் கீபோர்டு ஆகிய இரண்டின் வசதியும் இதில் உள்ளது, உங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதன் மூலம் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்யவும், வெப்சைட்டில் பிரவுஸ் செய்ய மற்றும் வசதியான டேப்லெட் மோட்- கேம்ஸ்களை விளையாட மற்றும் பயணத்தின்போது பொழுதுபோக்கு நோக்கத்திற்காக பயன்படுத்த convertible laptop-கள் ஏற்றவை.

உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப convertible laptops வாங்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் கருத்தில் கொள்ள கூடிய சில தயாரிப்புகள்

HP Envy x360 2-இன்-1 லேப்டாப்:

இந்த டிவைஸில் 12வது ஜென் இன்டெல் கோர் ப்ராசஸர், 16GB ரேம், லைட்னிங் ஃபாஸ்ட் 512GB எஸ்எஸ்டி மற்றும் பிரமிக்க வைக்கும் 13.3 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் போர்ட்டபிலிட்டிக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஏற்ற இதன் எடை 1.32 கிலோ மட்டுமே.

ASUS ROG Flow X13:

இந்த சிறிய பவர்ஹவுஸ் டிவைஸானது 13.4 இன்ச் FHD + 120Hz டச் டிஸ்ப்ளே, AMD Ryzen 9 ப்ராசஸர், 4 GB RTX 3050 கிராஃபிக்ஸ் மற்றும் 16 GB ரேம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. தடையற்ற கேமிங் மற்றும் சிறந்த மல்ட்டி டாஸ்கிங்கை எதிர்பார்க்கும் யூசர்களுக்கு 1.3 கிலோ லைட்வெயிட்டுடன் கூடிய ROG Flow X13 சிறந்த தேர்வாகும்

Samsung Galaxy Book 3 360:

இன்டெல் 13-வது ஜென் ப்ராசஸர், வைப்ரன்டான 13.3 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 16GB ரேம் மற்றும் பெரிய 1TB SSD உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்களை சாம்சங்கின் Galaxy Book 3 360 கொண்டுள்ளது.

1.16 கிலோ எடையுள்ள இந்த டிவைஸில் விண்டோஸ் 11 மற்றும் MS Office ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது வேலை மற்றும் பொழுதுபோக்கு இரண்டிற்கும் ஏற்ற டிவைசாக உள்ளது.

Dell Inspiron 7420 2-இன்-1 லேப்டாப்:

குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த Dell Inspiron 7420 டிவைசானது Intel Core i7 ப்ராசஸர், 16GB ரேம், 14.0-இன்ச் FHD+ டச் டிஸ்ப்ளே மற்றும் 512GB SSD உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆக்டிவ் பேன், டச் எக்ஸ்பீரியன்சை மேம்படுத்துகிறது. இதில் உற்பத்தித்திறனை அதிகரிக்க விண்டோஸ் 11 மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours