ஜூன் மாதம் முழுவதும் சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TV) வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சாம்சங் இந்தியா நிறுவனம் இம்மாத இறுதிவரை அதாவது ஜூன் 30 ஆம் தேதி வரை தொடரும் சாம்சங் பிக் டிவி டேஸ் சேல் (Samsung Big TV Days Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்து உள்ளது.
இந்த சிறப்பு விற்பனையின்கீழ் அல்ட்ரா-பிரீமியம் நியோ கியூஎல்இடி, ஓஎல்இடி மற்றும் கிரிஸ்டல் 4கே யுஎச்டி டிவிகள் உட்பட, சாம்சங் நிறுவனத்தின் பல ஸ்மார்ட் டிவிகள் மீது சலுகைகள்அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங்கின் கூற்றுப்படி, பயனர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேம்படுத்தவும், டி20 கிரிக்கெட் உலக கோப்பைக்காகவுமே இந்த ‘பிக் டிவி டேஸ்’ சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 30 வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது, வாடிக்கையாளர்கள் வாங்கிய டிவியை பொறுத்து ரூ.89,990 மதிப்புள்ள செரிஃப் டிவி அல்லது ரூ.79,990 மதிப்புள்ள சவுண்ட்பார் இலவசமாக கிடைக்கும்.
இந்த இலவச சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் நியோக்யூஎல்இடி (Neo QLED), ஓஎல்இடி (OLED) மற்றும் கிரிஸ்டல் 4கே யுஎச்டி டிவி (Crystal 4K UHD TV) வரம்பில் உள்ள 98-இன்ச், 85-இன்ச், 83-இன்ச், 77-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்களின் மீது ஜூன் 1 முதல் ஜூன் 30, 2024 வரை அணுக கிடைக்கும்.
மேலும் சாம்சங் பிக் டிவி டேஸ் சேல்-ன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,990 முதல் ஈஸி இஎம்ஐ விருப்பம் மற்றும் 20% வரையிலான கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும். இந்த சலுகைகள் அனைத்துமே சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான சாம்சங்.காம் (Samsung.com) வழியாக மட்டுமின்றி முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களின் வழியாகவும் கிடைக்கும்.
சாம்சங் நிறுவனமானது, நியோ க்யூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவி, க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி, நியோ க்யூஎல்இடி 8கே ஸ்மார்ட் டிவி உட்பட மொத்தம் ஐந்து 98-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சிஇஎஸ் 2024 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு வந்த சாம்சங் நிறுவனத்தின் புதிய 98-இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலும் அடங்கும். அம்சங்களை பொறுத்தவரை, படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த ஸ்மார்ட் டிவியில் ஏஐ-அடிப்படையிலான அம்சம் பயன்படுத்துகிறது.
பொதுவாக, டிஸ்பிளேவின் அளவு பெரிதாகும்போது அவற்றின் பிக்சல்களும் பெரிதாகின்றன. இருப்பினும், சூப்பர்சைஸ் பிக்சர் என் ஹான்சர் மூலம், இந்த டிவியின் ஷார்ப்னஸ் அதிகரிக்கப்படுவதாக சாம்சங் நிறுவனம் கூறுகிறது.
இதன்விளைவாக இந்த 98-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பிக்சல் சிதைவு இருக்காது, கூடவே ஸ்க்ரீனில் புலப்படும் நாய்ஸ்ஸும் குறையும். சாம்சங் 98-இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 4கே அப்ஸ்கேலிங், பர்கலர் மற்றும் எச்டிஆர் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது.
இதிலுள்ள மோஷன் எக்ஸ்செலரேட்டர் செயல்பாடு மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆனது சீரான கேம்ப்ளேவையும் உறுதிப்படுத்தும்.
இதிலுள்ள கேமிங் ஹப் மூலம் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் மற்றும் அமேசான் லூனா போன்றவற்றிலிருந்து கேம்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற கேமிங் அம்சங்களை பொறுத்தவரை, இதில் ஏஐ ஆட்டோ கேம் மோட், மினி மேப் ஆட்டோ டிடெக்ஷன் மற்றும் விர்ச்சுவல் ஏம் பாயிண்ட் ஆகியவைகள் உள்ளன.
+ There are no comments
Add yours