செயற்கை நுண்ணறிவை கற்றுக் கொள்வதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை முனைவர் ராதிகா கூறுகையில், “கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு பயில்வதற்கு 12ஆம் வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதன் செய்யும் வேலைகளை ப்ரோக்ராம் மூலமாக உருவாக்கி இயந்திரத்தை வைத்துச் செய்வதாகும். செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு ஒரு தனித்துவமான பாடப்பிரிவு ஆகும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் எதிர்காலத்தில் 11 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்பு பொறியியல் கல்லூரிகளில் மட்டும் இருந்த செயற்கை நுண்ணறிவு பாடப்பிரிவு தற்பொழுது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் வந்துள்ளது. நாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தொடக்கக் காலத்தில் உள்ளோம்.
இந்த கல்வியை இப்பொழுதே பயில உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு படிப்பவர்களுக்கு அரசாங்க வேலைகள் மட்டும் இன்றி தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி விவசாயத்துறை, மருத்துவத்துறை என பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன” எனத் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours