பட்ஜெட் மற்றும் நடுத்தர விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ள ரியல்மீ (Realme), விரைவில் தங்களது அடுத்த பட்ஜெட் விலையுள்ள போனை அறிமுகப்படுத்த உள்ளது.
எனினும் அந்த மாடலின் பெயரை இன்னும் ரியல்மீ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தப் போன் குறித்து இணையத்தில் கசிந்துள்ள தகவல்களால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட்போனின் பெயர் ரியல்மி C65 என்றும் 6GB RAM வசதியை இது கொண்டுள்ளது என்றும் செய்தி பரவி வருகிறது.
இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. மேலும் இந்தப் போனின் விலையும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000-க்கும் கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 256GB இண்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மெமரி மற்றும் ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, 6GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த பட்ஜெட் விலையில் நாம் எதிர்பார்க்கும் ஸ்டோரேஜ் வசதிகளை விட இந்தப் போனில் அதிகமாகவே உள்ளது.
கேமரா வசதி
கேமரா வசதியைப் பொறுத்தவரை ரியல்மி C65 போனி டூயல் கேமரா செட்டப் உள்ளது. போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் அதோடு சேர்த்து ஃப்ளிக்கர் சென்ஸாரும் உள்ளது.
போனின் முன்பக்கத்தில் செல்ஃபீ விரும்பிகளுக்காகவும் வீடியோ கால் பேசுவதற்கும் வசதியாக 8MP கேமரா உள்ளது. ஆண்டிராய்டு 14 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்தப் போனின் ஓரங்களில் கைரேகை சென்ஸார் உள்ளது.
+ There are no comments
Add yours