புதிய Acer ALG கேமிங் லேப்டாப் என்ன ரேட் தெரியுமா?

Spread the love

இந்தியாவில் Acer ALG கேமிங் லேப்டாப் கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 11) அறிமுகமாகியுள்ளது. கேமிங்கை மையப்படுத்தி Acer நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லேட்டஸ்ட் லேப்டாப் இதுவாகும்.

12-ம் தலைமுறை இன்டல் கோர் i5 பிராசஸரில் இயங்கும் இந்த லேப்டாப், 16GB DDR4 RAM மற்றும் Nvidia GeForce RTX 3050 GPU-யுடன் கூடிய 6GB DDR6 மெமரியை கொண்டுள்ளது. மேலும் 512GB வரையிலான SSD ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.

Acer ALG கேமிங் லேப்டாப்பின் விலை:

Acer ALG கேமிங் லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.56,990 ஆகும். தற்போது ஸ்டீல் கிரே நிறத்தில் மட்டுமே இந்த லேப்டாப் கிடைக்கிறது. Acer நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர் மற்றும் அமேசான் தளம் வழியாக இந்தியாவில் உள்ளவர்கள் இந்த லேப்டாப்பை வாங்கிக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி Acer நிறுவனத்தின் பிரத்யேக கடைகள் மற்றும் நாட்டிலுள்ள பிற ரீடெய்ல் ஸ்டோர்களிலும் இந்த லேப்டாப்பை வாங்க முடியும்.

Acer ALG கேமிங் லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்

புதிதாக அறிமுகமாகியுள்ள Acer ALG கேமிங் லேப்டாப் விண்டோஸ் 11 ஹோமில் இயங்குகிறது. மேலும் சிறந்த பெர்ஃபார்மன்ஸ்சிற்காக 16GB DDR4 RAM வசதியுடன் கூடிய 12-ம் தலைமுறை இண்டல் கோர் i5-12450H CPU பிராசஸர் உள்ளது.

மேலும் Nvidia GeForce RTX 3050 GPU-யுடன் கூடிய 6GB DDR6 வீடியோ மெமரியும் இந்த லேப்டாப்பில் உள்ளது. 15.6 இன்ச் முழுமையான HD தரத்துடன் கூடிய (1,920×1,080 பிக்ஸல்) IPS டிஸ்பிளே தரத்துடன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டை பெற்றுள்ளது.

Acer ALG கேமிங் லேப்டாப்பில் 512GB NVMe SSD ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை டூயல் M.2 ஸ்லாட் மூலம் 2TB வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் இரண்டு USB 3.2 டைப் சி போர்ட், ஒரு USB 3.2 டைப் ஏ போர்ட் மற்றும் USB 3.2 டைப் ஏ போர்ட், ஒரு ஈதர்நெட் போர்ட், HDMI போர்ட் ஆகியவையும் இந்த லேப்டாப்பில் உள்ளன. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை Acer ALG கேமிங் லேப்டாப்பில், Wi-Fi 6 மற்றும் ப்ளூடூத் 5.1 ஆப்ஷன் உள்ளது.

இதில் 4 செல்களுடன் கூடிய 54Whr லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதற்கு உறுதுணையாக கூடவே 120W சார்ஜிங்கும் உள்ளது. கூடுதல் வசதியாக மைக்ரோ போனுடன் கூடிய 1 மெகாபிக்ஸல் வெப்கேம் இருக்கிறது. 48.1 x 32.4 x 9.2 செ.மீ அளவுள்ள இந்த லேப்டாப் 1.99 கிலோ எடையை கொண்டிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours