மின்சார கட்டணம் பிரச்னை.. ஃப்ரிட்ஜ்-ஐ ஆஃப் செய்யலாமா?

Spread the love

குளிர்சாதன பெட்டி குறித்து பல கேள்விகள் எழும். அப்படிப்பட்ட கேள்வி ஒன்றுக்கு தான் விடை கண்டுபிடிக்க போகிறோம். குளிர்சாதன பெட்டியை இடை இடையே அணைத்து வைத்தால் மின்சார கட்டணம் குறையுமா என்பது தான் அந்த கேள்வி.

குளிர்சாதன பெட்டிகள் பொதுவாக 24 மணி நேரமும் இயங்க கூடியதாக தான் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்தாலும் குளிர்சாதன பெட்டிக்கு ஒன்றும் ஆகாது.

குளிர்சாதன பெட்டி சீராக செயல்பட்டு உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும். இந்த சூழலில் குளிர்சாதன பெட்டியை 1 அல்லது 2 மணி நேரம் அணைத்து வைத்தால் அதன் வெப்பநிலை மாறும். இதன் காரணமாக பெட்டிக்குள் இருக்கும் உணவு பொருட்கள் கெட்டுப்போய்விடும்.

எனவே குளிர்சாதன பெட்டி 24 மணி நேரமும் இயங்குவதுதான் சரியானதாக இருக்கும். அதுமட்டுமன்றி 1 அல்லது 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியை அணைத்து வைத்தால் அது பெரிய மாற்றத்தை கொடுக்காது எனவும் கூறப்படுகிறது.

அதாவது குளிர்சாதனப்பெட்டியை ஆப் செய்தவுடன், அதன் உள்ளே வெப்பநிலை உயரத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து நீங்கள் குளிர்சாதனப்பெட்டியை மீண்டும் ஆன் செய்யும்போது, கம்ப்ரசர் குளிர்சாதனப்பெட்டியை அதே வெப்பநிலையில் மீண்டும் குளிர்விக்க அதிக நேரம் எடுக்கும், மேலும் அதைச் செய்வதற்கு இன்னும் அதிக மின்சாரம் செலவழிக்கும்.

அத்துடன் நவீன குளிர்சாதனப்பெட்டிகள் ஒரு தெர்மோஸ்டாட் மற்றும் ஒரு ஆட்டோ-கட்-ஆஃப் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளன, இதனால் வெப்பநிலையை அடைந்தவுடன் கம்ப்ரசர் தானாகவே அணைக்கப்படும்.

இது குளிர்சாதன பெட்டியை குளிர்ச்சியாகவும், மின்சாரத்தை சேமிக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் வெளியூர் பயணமாக எங்காவது செல்ல விரும்பினால், குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு அணைத்து வையுங்கள்.

மாறாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டும் அணைத்து வைப்பது சிறந்த தேர்வாக இருக்காது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours