இணைய தேடுதளமான கூகுளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான ‘ஜெமினி’ தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் உள்ள செல்போன்களில் பதிவிறக்கம் செய்து இதனை பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செல்போன்களில் கூகுள் அசிஸ்டன்டிற்கு பதிலாக ஜெமினியை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக, 1,500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரம் பெற முடியும்.
இதுகுறித்து, X தளத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளதாவது:- ‘உற்சாகமான செய்தி! ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த உள்ளூர் மொழிகளை ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் பிற புதிய அம்சங்களையும் சேர்த்து, ஆங்கிலத்தில் கூகுள் மெசேஜஸ்-ல் ஜெமினி-ஐ அறிமுகப்படுத்துகிறோம்’ என அறிவித்துள்ளார்.
டேட்டா அனாலிட்டிக்ஸ் முதல் எண்கள் இருக்கக்கூடிய ஆவணங்கள் வரை அதில் இருக்கும் விஷயங்களை நமக்கு வகைப்படுத்தி கொடுக்கும் எனவும் கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஜெமினி ஏஐ, மல்டிபில் பிளாட்பார்ம்களில் பயன்படுத்தலாம்.
அதாவது, ஒருவரின் மொபைல், இணையம் அல்லது கூகுள் மெசேஜஸ் மூலமாகவும் பயன்படுத்தலாம் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது இந்திய மொழிகள் அதாவது தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours