புதிய ‘ஸ்மார்ட் போன்களை களம் இறக்கும் HMD நிறுவனம்

Spread the love

HMD நிறுவனம் முதன் முறையாக வருகிற 29 – ந் தேதி புதிய ‘ஸ்மார்ட்போன்’களான HMD பல்ஸ், பல்ஸ்+ மற்றும் பல்ஸ் ப்ரோ ஆகிய 3 வகைகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது.

ப்ரோ மற்றும் பிளஸ் மாடல்கள் 128 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன, இந்த ஸ்மார்ட்போன்களின் பல்ஸ் 64 ஜிபி. இதன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 256ஜிபி வரை விரிவாக்க சேமிப்பகம் உள்ளன.

HMD நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ஸ்மார்ட்போன்கள் பல்ஸ் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் பல்ஸ் ப்ரோ மற்றும் பல்ஸ் பிளஸ் மாடல்களில் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி606 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

HMD 3 வருட பாதுகாப்புடன் இரண்டு முக்கிய OS புதுப்பிப்புகள் வழங்குகிறது. இந்த செல்போன்கள் Android 14 இயக்க முறைமையில் இயங்குகின்றன.
பல்ஸ், பல்ஸ் பிளஸ் மற்றும் பல்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளன.

பிளஸ் மாடல் ஸ்மார்ட்போனில் 20W வேகமான சார்ஜிங் உள்ளது, அதே போல் பிளஸ் மாடல்கள் 10W சார்ஜிங் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜாக், 4ஜி, வைபை 5 (AC), புளூடூத் 5.0 மற்றும் NFC போன்ற வசதிகள் உள்ளன.

பிளஸ் மற்றும் ப்ரோ மாடல்களில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. பல்ஸ் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் இரண்டாம் நிலை கேமரா 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகும்.

இதில் 720p தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 600 நிட்கள் வரையிலான உச்ச பிரகாசம் ஆகியவை உள்ளன. மேலும் அதே 6.65-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன.

இந்த செல்போன்களை எளிதில் பழுது பார்க்க முடியும். பல்ஸ் மற்றும் பல்ஸ் பிளஸ் செல்போன்களில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன.

அதே போல் பல்ஸ் ப்ரோ செல்பிக்களுக்கான 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது.HMD பல்ஸ் பிளஸ் விலை ரூ. 14,500, பல்ஸின் விலை ரூ. 12,500 மற்றும் பல்ஸ் ப்ரோவின் விலை ரூ. 16,000 ஆகும். HMD வகை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் கிடைக்க உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours