சோனி நிறுவனம் இந்தியாவில் ‘அல்ட் பவர் சவுண்ட்’ சீரிஸ் என்று அழைக்கப்படும் புதிய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கலெக்ஷனில் ULT TOWER 10, ULT FIELD 7, ULT FIELD 1 என மூன்று ப்ளூடூத்-எனேபிள்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் இரைச்சலை-ரத்துசெய்யும் ஒரு ஜோடி வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் (ULT WEAR) உள்ளன,
இவை அனைத்தும் “பவர்புல் டீப் பாஸ்”(powerful deep bass) வழங்குவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்தத் சீரிஸில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பும் தனித்துவமான ‘ULT’ பட்டனுடன் வருகிறது, இது யூஸர்களுக்கு பல சவுண்ட் மோட்ஸ்களுடன் இசை கேட்கும் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துகிறது.
இதில், அல்ட் டவர் 10 ஆனது பார்ட்டி ஸ்பீக்கராக வடிவமைக்கப்பட்டுள்ளது, சோனியின் அல்ட் பவர் சவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லோ-என்ட் ஃப்ரீக்வென்ஸிகளை அதிகரிக்கவும், பேஸ் செயல்திறனை வழங்கவும் அனுமதிக்கின்றது.
இந்த மாடலில் உள்ள ULT பட்டன், டீப்பர், அதிக எதிரொலிக்கும் பாஸ் அல்லது பஞ்சியர் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது. இந்த ஸ்பீக்கரில் ஓம்னி டைரக்ஷனல் லைட்டிங் (omnidirectional lighting) கொண்டுள்ளது. இந்த அல்ட் டவர் 10 விலை ரூ.89,990 ஆகும்.
மேலும், போர்ட்டபிள் பார்ட்டி ஸ்பீக்கர்களை ரசிப்பவர்களுக்கு, அல்ட் ஃபீல்ட் 7 உங்களின் விருப்பமான தேர்வாக இருக்கலாம். இது டைனமிக் லைட்டிங் மற்றும் கரோக்கிக்கான மைக் போர்ட் ஆகியவற்றைக் கொண்ட மற்றொரு போர்ட்டபிள் பாஸ்-ஹெவி பார்ட்டி ஸ்பீக்கர் ஆகும்.
இந்த ஸ்பீக்கர் விரைவான சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் 30 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இது IP67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பும் கொண்டது. பேக் பேனலில் Echo மற்றும் கீ கன்ட்ரோல்ஸ்கள் அக்சஸ் செய்ய கூடியவையாக அமைந்திருக்கின்றன. இந்த அல்ட் ஃபீல்ட் விலை ரூ.7 39,990 ஆகும்.
+ There are no comments
Add yours