லாவா புதிய 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்; விலை எவ்வளவு?

Spread the love

இந்தியாவில், லாவா நிறுவனம் தனது Blaze Curve 5G மொபைலை 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 வேரியன்ட்ஸ்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இவற்றின் விலைகள் முறையே ரூ.17,999 மற்றும் ரூ.18,999 ஆகும். இந்த மொபைல் அயர்ன் கிளாஸ் மற்றும் விரிடியன் உள்ளிட்ட 2 கலர் ஆப்ஷன்களில் விற்கப்படுகிறது.இது அமேசான், லாவா இ-ஸ்டோர் மற்றும் பிற ரீடெயில் அவுட்லெட்ஸ் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் கொடுக்கப்பட்டுள்ள விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் மூலம் ஆன்போர்ட் ஸ்டோரேஜை 16GB வரை விரிவாக்கி கொள்ள முடியும். கேமராக்களை பொறுத்தவரை இதன் பின்புறம் LED ஃபிளாஷ் கொண்ட 3 ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

இதில் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷனுடன் கூடிய 64-மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடக்கம். செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இது ஸ்கிரீன் ஃபிளாஷ் உடன் 32 மெகாபிக்சல் ஃப்ரன்ட் ஃபேஸிங் கேமராவை கொண்டுள்ளது.

இந்த டூயல் நானோ சிம் மொபைலானது ஆண்ட்ராய்டு 13-ல் இயங்குகிறது எனினும் இந்த டிவைஸிற்கு ஆண்ட்ராய்டு 14 அப்கிரேட் வழங்கப்டும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த புதிய 5G ஃபோனில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 394ppi பிக்சல் டென்சிட்டி கொண்ட 6.67-இன்ச் ஃபுல்-HD+ 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours