லெனோவோ நிறுவனம் முற்றிலும் புதிய டேப்லெட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லெனோவோ டேப் M11 மாடல் 7.15mm அளவில் உள்ளது. இதன், எடை 465 கிராமுடன் மிக மெல்லிய டிசைனை கொண்டுள்ளது.
முற்றிலும் புதிய இந்த லெனோவோ டேப் M11-ன் அம்சங்கள் என்னென்ன என்று இப்போது பாரக்கலாம்: 11 இன்ச் 1920×1200 WUXGA டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி 3.5mm ஆடியோ ஜாக், மாலி G52 GPU 8 ஜி.பி. ரேம், 128 ஜிபி. மெமரி 13MP பிரைமரி கேமரா 8MP செல்ஃபி கேமரா வைபை, ப்ளூடூத் 5.1 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி 15 வாட் சார்ஜிங் வசதி லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்டு சப்போர்ட் இந்த டேப் சீஃபார்ம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.
+ There are no comments
Add yours