கோடை வெயில் கொளுத்திய நிலையில் ஏராளமான மக்கள் ஏசி, ஏர் கூலர் போன்ற குளிர்சாதன பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் அதிகமான விலை உயர்வின் காரணத்தால் மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது அதிக செலவு செய்ய முடியாத மக்களுக்காகவே இப்போது நானோ ஏர் கூலர் சாதனமொன்று அறிமுகமாகியுள்ளது.
தற்போது அறிமுகமாகியுள்ள வெயில் காலத்தில் சூட்டை தணிக்கும் நானோ ஏர் கூலர் சாதனம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த சாதனத்தை பற்றி தற்போது தெரிந்துகொள்ளுங்கள்.
நானோ ஏர் கூலர் என்ற சாதனம் குளிங்க ஃபேன்னுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது ஹவாய் பிராண்ட் என்ற பெயருடன் அமேசான் தளத்தில் ஹவாய் நானோ பர்சனல் யூஸ் கூலிங் ஃபேன் உடன் ஷைனிங் ஏபிஎஸ் பாடி (HAVAI Nano Personal Use Cooling Fan with Shining ABS Body) என்ற மாடல் பெயருடன் இந்த சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஹவாய் நானோ கூலிங் ஃபேன் பற்றிய விபரங்களை பார்க்கலாம். இந்த புதிய குட்டி சைஸ் நானோ கூலிங் ஃபேன் சாதனம் ஒரு சிறிய சைஸ் ஏர் கூலர் போல செயல்படுகிறது.
சிறிய இடத்தில் கச்சிதமாக பொருந்தும் அமைப்பை இது கொண்டுள்ளது. பார்ப்பதற்கு சிறிதாக காட்சியளித்தாலும், இதன் வடிவமைப்பு மிகவும் உறுதியான மெட்டீரியலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாடி அக்கரிலோனிட்ரில் புட்டடியேன் ஸ்டைரென் என்ற உறுதியான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ABS பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனால், இது எளிதில் நிறம் மாறாது மற்றும் உடையாது. இந்த ஹவாய் ஏர் கூலிங் ஃபேன் சாதனம் 3 ஸ்பீட் மோட்டார் உடன் தெர்மல் ஓவர்லோட் ப்ரோடெக்டர் அம்சத்துடன் வருகிறது.
இது 5090 அடர்த்தி கொண்ட ஹனிகோம்ப் பேட்ஸ் கொண்ட ஃப்ளுட் பேப்பர் ஆதாரத்துடன் வருகிறது. இந்த அழகான குட்டி ஏர் கூலர் சாதனத்திற்குள்ளே தண்ணீர் மற்றும் ஐஸ் கியூப்ஸ்களை பயன்படுத்த இந்த சாதனம் ஆதரிக்கிறது.
இந்த நானோ ஏர் கூலர் சாதனம் 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய வாட்டர் டேங்க்கை கொண்டுள்ளது. இதன் மேற்பகுதியில், ஐஸ் பாக்ஸ் உடன் வாட்டர் இன்லெட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது 4 அடி தூரம் வரை சில் காற்றை வீசுகிறது. அதேபோல், இந்த மினி ஏர் கூலர் சாதனம் 3 பின் பிளக் உடன் வருகிறது. ட்ரிபிள் பின் பயன்படுத்தும் பொழுது, இந்த சாதனத்தின் பிளக் கலராமல் கச்சிதமாக பொருந்துகிறது. இந்த சாதனம் அமேசான் (Amazon) தளத்தில் ரூ.3590 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.5,999 ஆகும்.
+ There are no comments
Add yours