மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
வாட்ஸ்அப் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. நண்பர்கள், உறவினர்களுடன் ஷேட் செய்யலாம், பணம் அனுப்பலாம்.
மேலும், போட்டோ, வீடியோ, ஃபைல்களை அனுப்பலாம். அந்த வகையில், போட்டோ, வீடியோ பகிரும் போட்டோ லைப்ரரி வசதியில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் மூலம் இன்னும் எளிதாக உங்கள் contacts-களுக்கு போட்டோ, வீடியோ பகிரலாம். WABeta இன்ஃபோவின் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் புதிய அப்டேட் பயனர்களுக்கு உதவியாக இருக்கும். புது அனுபவத்தை கொடுக்கும். இன்னும் எளிதாக போட்டோ லைப்ரரி அம்சத்தை பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது.
இந்த புதிய அப்டேட்டில், போட்டோ, வீடியோ பகிர attach files பட்டனை hold down செய்ய வேண்டும். இதன் பின்னர் அதுவே போட்டோ லைப்ரரி பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதன் பின் போட்டோகளை பகிரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் போட்டோ லைப்ரரி ஆப்ஷன் கிளிக் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு ஒரு ஸ்டெப் குறைத்து நேரத்தை சற்று சேமிக்கிறது.
+ There are no comments
Add yours