இண்டர்நெட் வேண்டாம்; ஆண்ட்ராய்டு போனில் ஃபைல்ஸ்-ஐ பகிர்வது எப்படி?

Spread the love

கூகுள் அதன் ‘Nearby Share’ வசதியை ‘Quick Share’ என்று பெயர் மாற்றியது. இது விண்டோஸ், குரோம் ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதி மூலம் போன், லேப்டாப், டேப்லெட்களுக்கு இமேஜ், வீடியோ அல்லது மற்ற ஃபைல்ஸ்களை எளிதாக ஷேட் செய்யலாம். குறிப்பாக இவைகளை இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தலாம்.

இதற்கு உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள செட்டிங்ஸ் அம்சத்திற்கு சென்று, கூகுள் ஆப்ஷன் செல்லவும். அங்கு ‘Quick Share’ என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் ஃபைல்ஸ் ஷேர் செய்யலாம்.
இதற்கு முதலில் எந்த போட்டோ, வீடியோ, ஃபைல்ஸ் ஷேர் செய்ய வேண்டுமோ அதை ஓபன் செய்து அங்கிருக்கும் ‘ஷேர்’ பட்டனை கொடுக்கவும்.

அடுத்து ‘Quick Share’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் அருகில் உள்ள devices காண்பிக்கும். இப்போது உங்கள் அருகில் உள்ள devices காண முடியவில்லை என்றால் வலப் புறத்தில் உள்ள 2 புள்ளி பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து செட்டிங்ஸ் செல்லவும்.

அடுத்து ‘Who can share with you’ கிளிக் செய்து ‘Visible to nearby devices’ ஆப்ஷன் turn on செய்யவும். இப்போது devices காண்பிக்கும், இதில் எந்த device உடன் ஷேர் செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.

எனினும் நீங்கள் உங்கள் device-க்கு அனுப்ப வேண்டும் என்றால் அது automatic ஆக ஷேர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours