ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் அறிமுகம்; இதன் சிறப்பு என்ன?

Spread the love

ஜூன் 27 ஆம் தேதி ஒன்பிளஸ் நிறுவனம், சீனாவில் வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடந்த திட்டமிட்டுள்ளது. அந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன், புதிய ஸ்மார்ட் வாட்ச், புதிய டேப்லெட், ஒன்பிளஸ் 3 பட்ஸ்-ன் புதிய கலர் ஆப்ஷன் என மொத்தம் 4 புதிய அறிமுகங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக இன்னொரு தயாரிப்பையும் அறிமுகம் செய்யவுள்ளது.

அது என்னவென்றால் ஜூன் 27 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் பவர் பேங்க்-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் (OnePlus 100W Super Flash Charging Power Bank) என்று அழைக்கப்படும்.

அறிமுகத்திற்கு முன்னதாகவே வரவிருக்கும் இந்த போர்ட்டபிள் பவர் பேங்கின் டிசைன் மற்றும் பிற முக்கிய விவரங்கள் சீன இ-காமர்ஸ் தளமான ஜேடி.காம் (JD.com) வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் ஆனது 12000mAh திறன் கொண்டதாக இருக்கும். இது இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: கிளவுட் கிரீன் மற்றும் சில்வர் விங் ஒயிட்.

ஒன்பிளஸ்-ன் இந்த பவர் பேங்க் டூயல்-டோன் பினிஷ் கொண்ட நேர்த்தியான ரெக்டாங்குலர் ஸ்லாப் வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு யூஎஸ்பி-ஏ போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் மிகவும் எளிதான பயன்பாட்டிற்காக இதில் ஒரு பவர் பட்டனும் உள்ளது.பெயர் குறிப்பிடுவது போல, ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் ஆனது அதிகபட்சமாக 100வாட் அவுட்புட்டையும், ரீசார்ஜ் செய்வதற்கு 45வாட் இன்புட்டையும் ஆதரிக்கிறது.

சுவாரசியமாக இது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் இயற்பட்களை மட்டுமின்றி லேப்டாப்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகவும் இருக்கும். இதன் விலை குறித்து எந்த தகவலும் இல்லை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours