ஸ்மார்ட்போனை டி.வி. ரிமோட் ஆக பயன்படுத்துவது எப்படி?

Spread the love

கூகுள் டிவி அப்ளிகேஷன் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை டிவி ரிமோட் ஆக மாற்றுவது எப்படி என்பதை இப்பொழுது பார்க்கலாம்:

  1. உங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் டிவி ஆகிய இரண்டின் ப்ளூடூத் அல்லது WiFi நெட்வொர்க்கை ஆன் செய்யவும்.
  2. உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் ஸ்டோரை திறந்து கூகுள் டிவி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள்.
  3. அப்ளிகேஷன் டவுன்லோட் ஆன பிறகு Google TV ஐ திறக்கவும். ஸ்கிரீனின் கீழ் வலது மூலையில் காணப்படும் ‘Remote button’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  4. இப்போது அருகில் உள்ள சாதனங்களோடு இணைவதற்கு அப்ளிகேஷன் அவற்றை ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கும். இந்த பட்டியலில் உங்களுடைய டிவி வந்தவுடன் அதனை தேர்வு செய்யுங்கள்.
  5. டிவியை தேர்வு செய்த பிறகு டிவி ஸ்கிரீனில் ஒரு கோட் காண்பிக்கப்படும்.
    இந்தக் கோடை யூசர் அப்ளிகேஷனில் என்டர் செய்ய வேண்டும். அதன் பிறகு ‘Pair button’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  6. ஸ்மார்ட் போன் உடன் உங்களது டிவி பேர் ஆனதும், உங்கள் போனை பயன்படுத்தி வால்யூம் மாற்றுவது, மியூட் செய்வது, வாய்ஸ் சர்ச் பயன்படுத்துவது, பாஸ்வேர்ட்களை டைப் செய்வது போன்றவற்றை நீங்கள் செய்யலாம்.

இந்த சௌகரியமான அம்சமானது யூசர்களை எந்த ஒரு முயற்சியுமின்றி சேனல்களை மாற்றுவது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மற்றும் தங்களுடைய ஃபேவரட் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது போன்றவற்றை ரிமோட் இல்லாமலேயே செய்வதற்கு அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours