எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது உலகளாவிய பணியாளர்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த முடிவு நிறுவனம் முழுவதும் பொருந்தினால், 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், ‘எங்கள் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நிறுவனத்தை நாங்கள் தயார்படுத்தும்போது, செலவைக் குறைப்பதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பார்ப்பது மிகவும் முக்கியம்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாங்கள் நிறுவனத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்துள்ளோம். உலகளவில் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைக்கும் முடிவு கடினமான முடிவுதான், ஆனால் அது செய்யப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours