விவோ தற்போது புதிய விவோ வாட்ச் ஜிடி-யை (Vivo Watch GT) சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் BlueOS-ல் இயங்குகிறது மற்றும் 100-க்கும் மேற்பட்ட ப்ரீசெட் ஸ்போர்ட் மோடுகளை இது கொண்டுள்ளது.
மேலும் இந்த வாட்ச் 21 நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் இ-சிம் ஆதரவுடன் வருகிறது. இது இதய துடிப்பு மற்றும் ரத்த ஆக்ஸிஜன் சென்சார்கள் போன்ற பல உடல்நலம் மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9,200 விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில், eSIM + வீகன் லெதர் ஆப்ஷன் CNY 899 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,400) விலையில் கிடைக்கிறது. விவோ சைனா இ-ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்சை வாங்கலாம் மற்றும் ஜூன் 14 முதல் விற்பனைக்கு வரும்.
ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே (AOD) ஆதரவுடன் 1.85-இன்ச் (390×450 பிக்சல்கள்) 2.5D கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இது AI ஷார்ட்ஹேன்ட் போன்ற பல AI-ஆதரவு அம்சங்களுடன் Vivoவின் BlueOS மூலம் இயங்குகிறது.
ஸ்மார்ட்வாட்ச் மேக்னெட்டிக் பின் சார்ஜிங் ஆதரவுடன் 505mAh பேட்டரி மூலம் இயங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் ரொடேடிங் ஃபங்க்ஷனல் கிரௌன்(rotating functional crown) ஆகியவை அடங்கும்.
குறிப்பாக விவோ வாட்ச் ஜிடி ஆனது ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார், ஆக்சிலெரேஷன் சென்சார், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் கொண்டுள்ளது.
100 ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் புரொபஷனல் கோச் சப்போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை 33 கிராம் மற்றும் அதன் பரிமாணங்கள் 45.8 x 39.6 x 11.2 மிமீ ஆகும். ஹார்ட் ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் , ஸ்லீப் மானிட்டர் , ஸ்ட்ரெஸ் மானிட்டர், ப்ரீத் டிரெய்னிங், மென்ஸ்சுரல் சைக்கிள் ட்ராக்கிங் போன்ற ஆரோக்கிய அம்சங்கள் இதில் உள்ளன.
+ There are no comments
Add yours