பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள விவோ ஸ்மார்ட்போன்!

Spread the love

பிரபல சீன மொபைல் பிராண்டான விவோ இந்தியாவில் சமீபத்தில் புதிதாக மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.19,999 என்ற ஆரம்ப விலையில் Vivo T3 5G மொபைலை நிறுவனம் இந்தியாவில் களமிறக்கி உள்ளது. தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த மிட்-ரேஞ்ச் Vivo மொபைலானது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் மற்றும் 5,000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.

மேலும், விவோவின் புதிய T3 5G மொபைலானது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1,800 nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FuntouchOS 14-ல் இயங்குகிறது. சிறந்த செயல்திறனுக்காக இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமரா செட்டப்பை பொறுத்தவரை இந்த மொபைலின் பின்பக்கத்தில் டூயல் ரியர் கேமரா யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.3, GPS மற்றும் USB Type-C உள்ளிட்டவை அடக்கம்.

விவோவின் இந்த புதிய அறிமுகம் நத்திங் ஃபோன் (2ஏ), சாம்சங்கின் Galaxy A34 5G, ரியல்மியின் 12 Pro, போகோவின் X6 Pro, iQOO Z7 Pro மற்றும் பல மொபைல்களுடன் போட்டியிடுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours