விவோ வாட்ச் ஜிடி அறிமுகம்: விலையை செக் பண்ணுங்க!

Spread the love

விவோ தனது சமீபத்திய ஸ்மார்ட் வாட்சாக விவோ வாட்ச் ஜிடி-யை (Vivo Watch GT) சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது BlueOS-ல் இயங்குகிறது மற்றும் 100-க்கும் மேற்பட்ட ப்ரீசெட் ஸ்போர்ட் மோடுகளை இது கொண்டுள்ளது.

ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே (AOD) ஆதரவுடன் 1.85-இன்ச் (390×450 பிக்சல்கள்) 2.5D கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இது AI ஷார்ட்ஹேன்ட் போன்ற பல AI-ஆதரவு அம்சங்களுடன் Vivoவின் BlueOS மூலம் இயங்குகிறது.

ஸ்மார்ட்வாட்ச் மேக்னெட்டிக் பின் சார்ஜிங் ஆதரவுடன் 505mAh பேட்டரி மூலம் இயங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் ரொடேடிங் ஃபங்க்ஷனல் கிரௌன்(rotating functional crown) ஆகியவை அடங்கும்.

eSIM + சிலிகான் ஸ்ட்ராப் ஆப்ஷன், CNY 799 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9,200) விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில், eSIM + வீகன் லெதர் ஆப்ஷன் CNY 899 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,400) விலையில் கிடைக்கிறது.

விவோ சைனா இ-ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்சை வாங்கலாம் மற்றும் ஜூன் 14 முதல் விற்பனைக்கு வந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours