125% லாபம் கொடுத்த பொதுத்துறை பங்கு

Spread the love

சுரங்க பொதுத்துறை நிறுவனமானம் NALCO (National Aluminium Company Limited) ஓடிசா அரசுடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஒடிசா அரசாங்கத்துடன் 698 ஹெக்டேர் பொட்டாங்கி பாக்சைட் சுரங்கத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 14, 2024) அன்று பிஎஸ்இயில் நேஷனல் அலுமினியம் கோ லிமிடெட் (நால்கோ) 4.60 சதவிகிதம் உயர்ந்துள்ளது.


வியாழன் அன்று தலா ரூ.186.50க்கு வர்த்தகத்தை முடித்த NALCO பங்குகள் வெள்ளிக்கிழமை 4.81 சதவீதம் உயர்ந்து, நாளின் அதிகபட்சமாக ரூ.195.10க்கு உயர்ந்துள்ளது.

வெள்ளியன்று ரூ.189.45க்கு அமர்வைத் தொடங்கிய நால்கோவின் பங்கு 4.16 சதவீதம் அல்லது ரூ.7.75 உயர்ந்து மதியம் 2:30 மணியளவில் ரூ.193.35க்கு வர்த்தகமானது. NALCO பங்குகள் ஆறு மாதங்களில் 86.61 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு வருட காலத்தில் 127.72 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது ஒரு வருடத்தில் 10.69 சதவீதம் மற்றும் 25.01 சதவீதம் உயர்ந்துள்ள நிஃப்டி 50ஐ விஞ்சியுள்ளது.

Zee வணிக ஆய்வாளர் நுபுர் ஜெய்ன்குனியா, NALCO பங்கை ரூ.190-க்கு வாங்கவும் மற்றும் ஸ்டாப் லாஸ் ரூ.184 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. பங்கு விலை 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.206.30 ஆஜவும், குறைந்தபட்சமாக ரூ.80.65 ஆகவும் ஏற்ற, இறக்கத்தை பதிவு செய்துள்ளது.

குத்தகை ஒப்பந்தம் பற்றிய விவரங்களை வெளியிட்ட NALCO, சுரங்கங்களின் ஆண்டு உற்பத்தி திறன் 3.5 மில்லியன் டன்கள் என்றும், 111 மில்லியன் டன்கள் இருப்புக்கள் இருப்பதாகவும், சுரங்கத்தின் ஆயுட்காலம் 32 ஆண்டுகள் என்றும் கூறுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours