சமீபத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிலும் SIP வகை மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலானோரின் முதல் சாய்ஸ் ஆக உள்ளது. அப்படி சமீபத்தில் பல லட்சம் லாபத்தைக் கொடுத்த எஸ்ஐபி திட்டங்களில் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியான வருமானத்தை வழங்கியுள்ளது.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் தொடங்கப்பட்ட ஆண்டான மே 24, 2013 அன்று முதல் நீங்கள் மாதம் ரூ.10,000 என SIP முறையில் முதலீடு செய்யத் தொடங்கியிருந்தல், இன்று அதன் மதிப்பு ரூ.45.58 லட்சமாக இருக்கும்.
கடந்த 11 ஆண்டுகளில், இந்த SIP சுமார் 21.11% வருடாந்திர வருவாயை வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், நீங்கள் SIP இல் முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.13.20 லட்சமாக இருக்கும் என மதிப்பு ஆராய்ச்சி கூறுகிறது.
பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி திட்டமான பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், ஏப்ரல் 30, 2024 நிலவரப்படி ரூ.63,933.76 கோடி நிர்வாகத்தின் கீழ் (AUM) சொத்துகளைப் பராமரித்துள்ளது. ஜூன் 7, 2024 நிலவரப்படி, நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ.79.76 ஆக உள்ளது.
பராக் பரிக் மியூச்சுவல் ஃபண்ட் இணையதளத்தின்படி , நேரடித் திட்டம் மற்றும் வழக்கமான திட்டத்திற்கு ரூ.73.75 ஆக உள்ளது.
இந்த ஃபண்ட் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. மேலும் பராக் பாரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நீண்ட கால எல்லையுடன் முதலீட்டாளர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது அல்ல.
+ There are no comments
Add yours