வங்கிக் கடன் விஷயத்தில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. அதன்படி, வங்கியல்லாத நிதி நிறுவனங்களை (என்பிஎஃப்சி) ரொக்கக் கடன் செலுத்தும் வரம்புகள் தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியினால் அனைத்து வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டில் பணப் பரிவர்த்தனைகளை குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ரிசர்வ் வங்கி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ரொக்கக் கடன்களை விநியோகிக்கும் போது நிறுவனங்கள் ரூ 20,000 வரம்பை மனதில் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதனுடன், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 269 SS-இன் விதிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் ரொக்கக் கடன் தொகையாக எடுக்க முடியாது. இதன் விளைவாக, எந்த வங்கியல்லா நிதி நிறுவனமும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக்கூடாது.
ஐஐஎஃப்எல் ஃபினான்ஸ் நிறுவனத்தின் கடன் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அம்பலமானதை அடுத்து, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours