2023-24ம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகளை பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்தன.
அதில் ஜூன் 11ம் தேதியான இன்று மட்டுமே 6 நிறுவனங்களின் பங்குகள் எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்கின்றன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஜிண்டால் சா , கிருதி நியூட்ரியன்ட்ஸ், கிருதி இண்டஸ்ட்ரீஸ் , டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் டிவிஆர் பங்குகள் ஜூன் 11ம் தேதியான இன்று எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்கின்றன.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2024 நிதியாண்டில், முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.28.15 இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜிண்டால் சா நிறுவனம் 2024 நிதியாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.4 இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த பங்கின் முகமதிப்பு ரூ.2 ஆகும்.
க்ரிதி இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) நிறுவனம் 2024ஆம் நிதியாண்டில் ஒரு பங்குக்கு 20 பைசா இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
கிருதி நியூட்ரியண்ட்ஸ் நிறுவனம் 2024 நிதியாண்டில் 4வது காலாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு 30 பைசா இறுதி டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours