அஞ்சலகங்களில் முதன்மை திட்டங்களாக உள்ள பி.பி.எஃப் மற்றும் மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.
பி.பி.எஃப்
பி.பி.எஃப் திட்டத்தில் அரசாங்கம் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்குகிறது. இதில் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 500 ஆகும்.
மேலும், அதிகபட்ச வைப்புத்தொகை ரூ. 1.50 லட்சம் ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்த வைப்புத்தொகைகள் விலக்கு பெற தகுதியுடையவை.
மேலும், இந்தத் தொகையை நிதியாண்டில் ரூ.50 மடங்குகளில் எத்தனை முறை செலுத்தினாலும் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை செலுத்தலாம். மாதத்திற்கான வட்டியானது, ஐந்தாவது நாளுக்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட கணக்கின் மிகக் குறைந்த இருப்பில் தீர்மானிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்(SCSS)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் அரசாங்கம் 8.2% வட்டி வழங்குகிறது.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000 ஆகவும், 1000க்கு பல மடங்குகளாகவும் இருக்க வேண்டும். ஒரு தனிநபரால் திறக்கப்படும் அனைத்து எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளிலும் அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சம் வரை இருக்கும்.
ஒரு நிதியாண்டில் அனைத்து எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளின் மொத்த வட்டி ரூ.50,000க்கு மேல் இருந்தால் வட்டிக்கு வரி விதிக்கப்படும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் டிடிஎஸ் செலுத்தப்படும் மொத்த வட்டியிலிருந்து கழிக்கப்படும்.
படிவம் 15 G/15H சமர்ப்பிக்கப்பட்டால் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மேல் திரட்டப்பட்ட வட்டி இல்லை என்றால் டிடிஎஸ் கழிக்கப்படாது.
+ There are no comments
Add yours