ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் ஜூன் 8 ஆம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,520 குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
இன்று ஜூன் 10ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.172 குறைந்து ஒரு கிராம் ரூ.5,431-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.1,376 குறைந்து ஒரு சவரன் ரூ.43,448க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.96.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours