தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இன்று தொடங்கி அடுத்த 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதன்படி கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க இன்றிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும். எனினும், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடையில்லை.
ஆழ்கடலில் மீன்பிடிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் வரத்து குறையும் என்று கூறப்படுகிறது. இதனால் மீன்களின் விலை மேலும் உயரும் என்றும் மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
+ There are no comments
Add yours