தங்கம் விலை கடும் உயர்வு: ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது!

Spread the love

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,960-க்கு விற்பனையானது. குறிப்பாக, கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இம்மாதம் 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 12-ம் தேதி ரூ.54 ஆயிரமாகவும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.6,870-க்கும் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.54,960-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.58,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,500 ஆக இருந்தது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours